தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம்! சரணம்!
1.
வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்
என்னையே மட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம்! சரணம்! – தொழுகிறோம்
2.
தலை தங்க மயமானவர்
தலை மயிர் சுருள் சுருளானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
பதினாயிரமாம் சரணம்! சரணம்! – தொழுகிறோம்
3.
கண்கள் புறாக் கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல
சின்னங்களும் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம்! சரணம்! – தொழுகிறோம்
4.
கரங்கள் பொன் வளையங்கள் போல
நிறங்கள் தந்தத்தைப் போல
கால்களும் கல் துண்கள் போல
காண்பதாலே சரணம்! சரணம்! – தொழுகிறோம்
5.
சமஸ்த சபையின் சிரசே
நமஸ்காரம் எங்கள் அரசே
பிரதான எம் மூலைக்கல்லே
ஏராளமாம் சரணம்! சரணம்! – தொழுகிறோம்
6.
அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
கூடி வந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம்! சரணம்! – தொழுகிறோம்
7.
பார்த்திபனே கன தோத்திரம்
கர்த்தனம் மங்கள தோத்திரம்
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலுயா! ஆமென்! ஆமென்!
– தொழுகிறோம்
thozhukirom engkal pithave
pozhuthellam aavi unmaiyutane
parisuthdha alangkaraththutane
dharisibpathinal saranam! saranam!
1.
venmaiyum sivabbumanavar
unmaiye uruvayk kondavar
ennaiye madduk kondavar
annaiye itho saranam! saranam! – thozhukirom
2.
dhalai dhangka mayamanavar
dhalai mayir surul surulanavar
pathinayiram beril siranthdhavar
pathinayiramam charanam! charanam! – thozhukirom
3.
kankal burak kankal pola
kannangkal baththikal pola
sinnangkalum siranthdhathale
ennilladha charanam! charanam! – thozukirom
4.
karangkal pon valaiyangkal pola
nirangkal dhanthdhaththaib pola
kalkalum kal thunkal pola
kanpathale saranam! saranam! – thozukirom
5.
samasadha sabaiyin sirase
namasakaram engkal arase
pirathana em mulaikkalle
eeralamam saranam! saranam! – thozukirom
6.
adiyarkalin asathiparam
arivukkettadha visatharam
kudi vanthdha em alangkaram
konda kodiyam saranam! saranam! – thozukirom
7.
parththipane kana thoththiram
karthdhanam mangkala thoththiram
vazhka vazhka vazhka endrum
alleluya! aamen! aamen!
– thozukirom